என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
மோடிக்கு மிரட்டல் எதிரொலி- திண்டுக்கல் காங்கிரஸ் அலுவலகத்தில் போலீசார் குவிப்பு
ByMaalaimalar30 May 2024 1:43 PM IST
- மோடி வருகைக்கு தமிழகத்தில் காங்கிரஸ், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
- திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.
திண்டுக்கல்:
பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவுபெறும் நிலையில் பிரதமர் மோடி 2 நாள் தியானம் செய்வதற்காக கன்னியாகுமரிக்கு வருகை தருகிறார். அங்குள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தங்கி தியானம் மேற்கொள்ள உள்ளார்.
மோடி வருகைக்கு தமிழகத்தில் காங்கிரஸ், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழகத்தை வஞ்சித்த மோடிக்கு தியானம் செய்ய மட்டும் தமிழகத்தில் இடம் தேவைப்படுகிறதா? என்று கண்டன போஸ்டர்களும் ஒட்டப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் மற்றும் கன்னியாகுமரி நோக்கி போராட்டத்துக்கு செல்லப்போவதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் போலீசார் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
Next Story
×
X