என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
2 குழந்தைகளின் தாய் மாயம்
Byமாலை மலர்3 Jun 2023 2:54 PM IST
- 30-ந் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதன். இவரது மனைவி தனலட்சுமி (வயது33). இவர்களுக்கு இசைநாதன் என்ற மகனும், இளமதி என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதனால் பதறிப்போன மாதன் அவரது மனைவியை பல இடங்களில் தேடிபார்த்தார். எங்கும் தேடியும் அவர் கிடைக்காததால் தனலட்சுமி இதுகுறித்து அவரது கணவர் மாதன் பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X