search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேதாரண்யம் கடற்கரையில் கரை ஒதுங்கிய மியான்மர் படகு
    X

    வேதாரண்யம் கடற்கரையில் கரை ஒதுங்கிய மியான்மர் படகு

    • மூங்கிலால் கட்டபட்ட மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடிய படகு கரை ஒதுங்கியுள்ளது.
    • புயலால் கரை தட்டியதா என விசாரணை.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் புஷ்பவனம் மீனவ கிராமத்தில், இன்று காலை 8 மணியளவில் மியன்மார் நாட்டை சேர்ந்த மூங்கிலால் கட்டபட்ட மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடிய படகு கரை ஒதுங்கியுள்ளது.

    இந்த மூங்கில் படகு 40 அடி நீளம், 15 அடி அகலம், 8 அடி உயரம் கொண்டதாகவும் சுமார் 150 மூங்கல்க ளால் கட்டபட்டுள்ளது. மழை நேரங்களில் தங்குவதற்கு ஏற்றார் போல் 6 அடி நீளம் 4 அடி அகலம் 4 அடி உயரம் கொண்ட ஓலையால் ஆன கூரை ஒன்றும் உள்ளது.

    இந்த படகில் மீன் பிடிக்க பயன்படுத்த கோழி தீவனம் 2 மூட்டை சுமார் 30 கிலோ உள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் வேதாரணியம் கடலோர காவல் குழுவினருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து வேதாரணியம் கடலோர காவல் குழுவின் இன்ஸ்பெக்டர் லோகநாதன், சப்-இன்ஸ்பெக்டர்கள் வரலட்சுமி, சுதாகர் மற்றும் போலீசார் படகை கைப்பற்றினர்.

    பின்னர் அந்த படகில் மியான்மர் நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் யாரும் வந்தார்களா அல்லது புயலால் கரை தட்டியதா என விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×