என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஏரியூர் அருகே ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
- ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடந்தது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரினம் செய்து வழிப்பட்டனர்.
ஏரியூர்,
தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள இராம கொண்ட அள்ளியில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில், இராம கொண்ட அள்ளி, சந்தன கொடிக்கால், ஆலமரத்தூர், குட்டமடுவு, கானிக்காடு, சிங்கிலிமேடு, கவுண்டனூர் உள்ளிட்ட 9 கிராம மக்களுக்கு சொந்தமானது.
இராம கொண்ட அள்ளியில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன், ஸ்ரீ கற்பக விநாயகர், சிவன், அம்பாள், மற்றும் நவகிரகங்கள் ஆகிய ஐந்து ஆலயங்கள் தற்போது புதுப்பிக்கப்பட்டு பிரமாண்ட கோபுரங்கள் எழுப்பப்பட்டுள்ளது.
இந்த ஐந்து ஆலயங்களுக்கு கோவில் கும்பாபிஷேக விழா இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை நாகமரை காவிரி ஆற்றிலிருந்து தீர்த்த குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.
நூற்றுக்கணக்கானவர்கள் தீர்த்தக்குடம், பால்குடம் எடுத்து பக்தி பரவசத்துடன் ஊர்வலம் வந்தனர்.
இதில் உற்சவ அம்மன் சிலையை அலங்கரித்து, பம்பை மேளதாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் ஊர்வலம் எடுத்து வரப்பட்டது.
இந்நிலையில் திங்கட்கிழமை முதல் ஐந்து கால யாக பூஜைகள் நடைபெற்றது, அதனை தொடர்ந்து இன்று காலை ஸ்ரீ சக்தி மாரியம்மன், ஸ்ரீ கற்பக விநாயகர், சிவன், அம்பாள், மற்றும் நவகிரகங்கள் ஆகிய ஐந்து ஆலய கோவில் கோபுர கலசங்களுக்கு, சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் செய்தனர்.
தொடர்ந்து அபிஷேக பூஜையும் அன்னதானமும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.