என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![மரக்காணம் அருகே கடற்கரை ஓரத்தில் நிறுத்தியிருந்த விசைப்படகு மூழ்கியது மரக்காணம் அருகே கடற்கரை ஓரத்தில் நிறுத்தியிருந்த விசைப்படகு மூழ்கியது](https://media.maalaimalar.com/h-upload/2022/09/14/1761808-meenavargal-2.jpg)
கடற்கரையில் குவிந்த மீனவர்கள்.
மரக்காணம் அருகே கடற்கரை ஓரத்தில் நிறுத்தியிருந்த விசைப்படகு மூழ்கியது
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அந்தப் படகிற்கு உரிமையாளர்களான முத்து, உதயகுமார், சக்கரபாணி, குமரன் உள்ளிட்ட 20 பேர் மற்றும் மீனவ பொதுமக்கள் அங்கு திரண்டனர்.
- எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் போலீசார் பாதுகாப்பு ப்பணியில் ஈடு பட்டுள்ளனர்.
விழுப்புரம்:
மரக்காணம் அருகே கூனிமேடு குப்பம் பகுதியில் நேற்று மாலை கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50 லட்சம் மதிப்பிலான விசைப்படகு எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கியது. இதனால் அந்தப் படகிற்கு உரிமையாளர்களான முத்து, உதயகுமார், சக்கரபாணி, குமரன் உள்ளிட்ட 20 பேர் மற்றும் மீனவ பொதுமக்கள் அங்கு திரண்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த விசைப்படகு புதுச்சேரி துறை முகத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். இதனை அடுத்து நேற்று மரக்காணம் கூனிமேடு குப்பத்திற்கு கொண்டு வந்து கடற்கரை ஓரமாக நிறுத்தி வைத்திருந்தனர். தற்போது இந்த படகு கடலில் மூழ்கியது. இதனால் அங்குள்ள மீனவர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கடலோர காவல் துறை ரோந்து பணியி னருக்கும், மரக்கணம் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் மற்றும் தீயணைப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடலில் மூழ்கிய கப்பலை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த பகுதியில் போதுமான வசதிகளுடைய துறைமுகம் அமைக்க வேண்டுமென அங்குள்ள மீனவ பொது மக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். மேலும் இது குறித்து அவர்கள் சாலை மறியல் செய்யப்போவதாக கூறினர் இதனை அறிந்த அதிகாரி கள் போலீசார் முன்னிலை யில் பேச்சுவார்த்தை நடத்தி, அங்கு எந்தவித அசம்பா விதமும் ஏற்படாத வண்ணம் போலீசார் பாதுகாப்பு ப்பணியில் ஈடு பட்டுள்ள னர். இதனால் அந்த பகுதி யில் பரபரப்பாக உள்ளது.