என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாரண்டஅள்ளி அருகே அனுமதியின்றி நொரம்பு மண் கடத்திய 2 டிப்பர் லாரிகள் பறிமுதல்

- பொக்லைன் எந்திரம் மூலம் இரண்டு டிப்பர் லாரிகளில் நொரம்பு மண் அள்ளிக் கடத்துவது தெரியவந்தது.
- வருவாய்த் துறையினர் விசாரணை நடத்திய போது டிப்பர் லாரி உரிமையாளர் மல்லா புரத்தைச் சேர்ந்த கோவிந்த கவுண்டர் மகன் ரவி என்பது தெரியவந்தது.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி ஜனப்பனூர் அருகே அனுமதியின்றி நொரம்பு மண் அள்ளுவதாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் வந்தது.
இது குறித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் சாந்தி வருவாய்த்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் பாலக்கோடு தாசில்தார் ராஜசேகரன் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது பொக்லைன் எந்திரம் மூலம் இரண்டு டிப்பர் லாரிகளில் நொரம்பு மண் அள்ளிக் கடத்துவது தெரியவந்தது அலுவலர்களை பார்த்தவுடன் டிரைவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து வருவாய்த் துறையினர் விசாரணை நடத்திய போது டிப்பர் லாரி உரிமையாளர் மல்லா புரத்தைச் சேர்ந்த கோவிந்த கவுண்டர் மகன் ரவி என்பது தெரியவந்தது.
இதையடுத்து இரண்டு டிப்பல்லாரிகளையும் வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர். இது குறித்து தாசில்தார் ராஜசேகரன் கொடுத்த புகாரின் பேரில் மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். லாரி உரிமையாளர் மற்றும் தப்பி ஓடிய டிரைவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.