search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பி.துரிஞ்சி பட்டி பேருந்து நிறுத்தம் அருகே  கால்வாய் அமைக்கும் பணியை  சப்-கலெக்டர் நேரில் பார்வையிட்டார்
    X

    பி.துரிஞ்சி பட்டி பேருந்து நிறுத்தம் அருகே கால்வாய் அமைக்கும் பணியை சப்-கலெக்டர் நேரில் பார்வையிட்டார்

    • சாக்கடை கழிவுகள் வெளியேற முடியாமல் சாலையில் தேங்கி கிடந்தது.
    • கழிவு நீர் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்டு வரும் கால்வாய்களை ஆய்வு மேற்கொண்டார்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள பி.துரிஞ்சி பட்டி ஊராட்சியில் பேருந்து நிறுத்தம் அருகே நெடுஞ்சாலையின் குறுக்கே சாக்கடை கழிவுகள் வெளியேற முடியாமல் சாலையில் தேங்கி கிடந்தது.

    தருமபுரி மாவட்ட கூடுதல் கலெக்டர், வளர்ச்சி திட்ட இயக்குனர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை தீபனா விஸ்வேஸ்வரி சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேற்று இரவு 7 மணி அளவில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, கழிவு நீர் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்டு வரும் கால்வாய்களை ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் இளம் குமரன், ஊராட்சி மன்ற தலைவர் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது கூடுதல் கலெக்டர் பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார்.

    Next Story
    ×