என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
சேலம் புதிய பஸ் நிலையம் அருகேபிணமாக கிடந்த 70 வயது முதியவர்
By
SLMVairakannan16 May 2023 3:14 PM IST

- 10-ந்தேதி மதியம் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார்.
- இது பற்றி பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
சேலம்:
சேலம் புதிய பஸ் நிலையம் பாலகிருஷ்ணா லாட்ஜ் சங்கம் சைக்கிள் நிறுத்தம் நிலை யம் அருகில் கடந்த 10-ந்தேதி மதியம் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். இது பற்றி பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவர் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த இந்த முதியவரின் பெயர் மற்றும் முகவரி தெரியாததால் உடலை ஒப்படைக்க முடி யாத சூழ்நிலை போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இறந்த முதியவருடைய இடது கால் முட்டி, இடது காலில் காய தழும்பு உள்ளது. எனவே இவரை பற்றி தகவல் கிடைத்தால் போலீஸ் நிலை யத்தில் தெரிவிக்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Next Story
×
X