என் மலர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை-தாம்பரம், மேட்டுப்பாளையம் சிறப்பு ரெயில்கள் மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிப்பு
- இந்த ரெயில்களுக்கும் இன்று முதல் முன்பதிவு தொடங்கி உள்ளது.
- ரெயில்கள் நீட்டிப்பு மூலம் கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகைகளுக்கு சொந்த ஊருக்கு வந்து செல்லும் தென்மாவட்ட பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை, நவ. 30-
தென்னக ரெயில்வேயின் மதுரை கோட்டத்தில் ரெயில் பயணிகள் நலச் சங்கத்தினர் கோரிக்கையை ஏற்று கோடை விடுமுறை மற்றும் பண்டிகை கால கட்டங்களில் தென் மாவட்டங்களுக்கு ஏராள மான சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நெல்லை-மேட்டுப்பாளையம் இடையே ஞாயிற்றுக்கிழமை தோறும் இயக்கப்படும் வண்டி எண். 06030 வாராந்திர சிறப்பு ரெயில் நெல்லையில் இருந்து மாலை 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளை யத்தை சென்றடைகிறது.
இதே போல மேட்டுப் பாளையம்-நெல்லை இடையே திங்கட்கிழமை தோறும் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் வண்டி எண். 06029 மேட்டுப்பாளையத்தில் இருந்து மாலை 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு நெல்லையை சென்றடையும்.
அம்பை, தென்காசி, சிவகாசி, மதுரை, பழனி, பொள்ளாச்சி, கோவை வழியாக இயக்கப்படும் இந்த ரெயிலை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்து ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு இன்று காலை முதல் தொடங்கியது.
இதேபோல் நெல்லை-சென்னை எழும்பூர் இடையே விருதுநகர், காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர், விழுப்புரம் , தாம்பரம் வழியாக இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06070-06069) மேலும் 2 மாதங்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
தாம்பரம்-நாகர்கோவில் இடையே வள்ளியூர், நெல்லை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல்,திருச்சி, விழுப்புரம் வழியாக இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06012-06013) மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ரெயில்களுக்கும் இன்று முதல் முன்பதிவு தொடங்கி உள்ளது. இந்த ரெயில்கள் நீட்டிப்பு மூலம் கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகைகளுக்கு சொந்த ஊருக்கு வந்து செல்லும் தென்மாவட்ட பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.