என் மலர்
உள்ளூர் செய்திகள்
புதிய போலியோ தடுப்பூசி நாளை முதல் அமல்
- பிறந்தது முதல் 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி பணிகள் ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெற்று வருகிறது.
- 9 மாதம் நிறைவடைந்த குழந்தைகளுக்கு எப்.ஐ.பி.வி. தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
திருப்பூர் :
தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் பணிகளில் முக்கிய அங்கமாக தடுப்பூசி பணிகள் நடக்கிறது. தமிழகத்தில் பிறந்தது முதல் 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி பணிகள் ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெற்று வருகிறது. போலியோ நோயை தடுப்பதற்காக தடுப்பூசி வாய்வழியாக 5 தவணையும், தோல்வழியாக 1½ மாதம் மற்றும் 3½ மாதம் என 2 தவணையாக கொடுக்கப்படுகிறது.
தற்–போது கூடுதலாக தோல் வழியாக செலுத்தப்படும் எப்.ஐ.பி.வி.என்ற போலியோ மருந்து 9 மாத முடிவில் எம்.ஆர். தடுப்பூசி போடும் போது வழங்கப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் 9 மாதம் நிறைவடைந்த குழந்தைகளுக்கு எப்.ஐ.பி.வி. தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நாளை முதல் புதிய போலியோ தடுப்பூசி அமலாகிறது. இதன் மூலமாக போலியோ நோய் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.