search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் கடும் பனிப்பொழிவால் இயல்பு வாழ்க்கை முடக்கம்
    X

    கடும் பனிப்பொழிவுக்கு நடுவே நட்சத்திர ஏரியில் செயற்கை நீரூற்றின் அருகே ஆனந்தமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தவர்களை படத்தில் காணலாம்.

    கொடைக்கானலில் கடும் பனிப்பொழிவால் இயல்பு வாழ்க்கை முடக்கம்

    • கடும் குளிர் காரணமாக அதிகாலை நடைபயிற்சி செல்வோர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
    • சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படுவதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

    பெரும்பாறை:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. தற்போது சராசரியாக 7 டிகிரி செல்சியஸ் முதல் 10 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை நிலவுகிறது. இதனால் காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். கடும் பனியால் பயிர்களும் பாதிப்படைவதால் விவசாயிகள் கவலையடைந்து வருகின்றனர். நகர் பகுதி மட்டுமின்றி மலை கிராமங்களிலும் பனி வாட்டி வருகிறது.

    கீழ்மலை கிராமங்களான பெரும்பாறை, பண்ணைக்காடு, தாண்டிக்குடி, பூலத்தூர், மங்களம்கொம்பு, கும்பரையூர், மஞ்சள்பரப்பு, குப்பமாள்பட்டி, கே.சி.பட்டி, பெரியூர், ஆடலூர், பாச்சலூர், பன்றிமலை போன்ற பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் வெயிலுக்கு ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் காலை 10 மணிக்கு மேல் தான் வெயில் வருகிறது. பெரும்பாலான நேரங்களில் அதுவும் வருவதில்லை. அதே போல் மாலை 4 மணிக்கு மேல் குளிர் அதிகரிக்க தொடங்கி விடுகிறது. கடும் குளிர் காரணமாக அதிகாலை நடைபயிற்சி செல்வோர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

    மொத்தத்தில் வாட்டி எடுத்து வரும் கடும் குளிர் மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி வருகிறது. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படுவதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

    Next Story
    ×