என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கூடலூர் அருகே பெண்ணை தாக்கிய முதியவர் கைது கூடலூர் அருகே பெண்ணை தாக்கிய முதியவர் கைது](https://media.maalaimalar.com/h-upload/2023/08/16/1933006-arrest.webp)
கோப்பு படம்
கூடலூர் அருகே பெண்ணை தாக்கிய முதியவர் கைது
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து பெண்ணை தாக்கிய முதியவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
- போலீசார் முதியவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கூடலூர்:
கூடலூர் அருகே குள்ளப்ப கவுண்டன்ப ட்டியை சேர்ந்தவர் ராணியம்மாள் (வயது60). இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் ஜெய க்கொடி (73). இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவ த்தன்று அத்துமீறி ராணி யம்மாள் வீட்டுக்குள் புகுந்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து கூடலூர் தெற்கு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்கொடியை கைது செய்தனர்.
தேவதானப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (34). இவர் அப்பகுதியில் இட்லி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அழகுராஜா என்பவர் இட்லி கேட்டு ஓட்டலுக்கு வந்துள்ளார். இட்லி தீர்ந்துபோய்விட்ட தாக கண்ணன் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அழகுராஜா அவரை சட்டையை பிடித்து இழுத்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்த புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.