search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிதாக அமையவுள்ள சாலையில்   மேம்பாலம் அருகில் இணைப்பு சாலை அமைத்து தர வேண்டும்   -பொம்மனூர் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
    X

    புதிதாக அமையவுள்ள சாலையில் மேம்பாலம் அருகில் இணைப்பு சாலை அமைத்து தர வேண்டும் -பொம்மனூர் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

    • பொம்மனூர் ஏரியின் பக்கத்தில் மேம்பாலம் ஒன்றும் வருகிறது.
    • மேம்பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் ரோடு, இணைப்பு சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பொம்மனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாய சங்கத்தினர் மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்களுடைய ஊரில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகள் கட்டி குடியிருந்து விவசாயம் செய்து வருகிறோம். எங்கள் ஊரை சுற்றிலும் சிறிய, சிறிய கிராமங்கள் உள்ளன.

    எங்களுடைய நிலங்க ளில் விளைந்த விலை பொருட்களை ஓசூர், பெங்களூர், சேலம், தருமபுரி, போன்ற பெரும் நகரங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு வசதியாக தற்பொழுது ஓசூர்-ராயக்கோட்டை-தருமபுரிக்கு செல்லும் சாலை எங்கள் ஊர் வழியாக புதியதாக அமைக்கப்படுகிறது.

    பொம்மனூர் ஏரியின் பக்கத்தில் மேம்பாலம் ஒன்றும் வருகிறது. எங்களது போக்குவரத்துக்கு வசதியாக அந்த மேம்பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் ரோடு, இணைப்பு சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும்.பொம்மனூர் பகுதியைச் சேர்ந்த விவசாய சங்கத்தினர் இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

    Next Story
    ×