என் மலர்
உள்ளூர் செய்திகள்
கம்பைநல்லூர் ஸ்ரீராம் பள்ளியில் ஓணம் திருநாள் கொண்டாட்டம்
- கேரளாவின் பாரம்பரிய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக அழகான பாரம்பரிய உடை அணிந்தும், உணவு வகைகளை அலங்கரித்து உற்சாகமாக கொண்டா டினர்.
- ஆசிரியர்கள் பூக்கோலம் இட்டு மாணவிகள் கேரளத்து பெண்கள் போல் ஆடை அணிந்து உற்சாகத்தோடு ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் ஸ்ரீராம் பப்ளிக் பள்ளியில் ஓணம் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பள்ளியின் தாளாளர் வேடியப்பன், சாந்தி வேடி யப்பன் குத்து விளக்கினை ஏற்றி விழாவிற்கு தலைமை வகித்தனர். பள்ளியின் இயக்குநர் தமிழ்மணி,பவானி தமிழ்மணி முன்னிலை வகித்தனர். கல்வி இயக்குநர் ஜான் இருதயராஜ் ஓணம் பண்டிகையின்வரலாற்று சிறப்பினை எடுத்துரைத்தார்.
இவ்விழாவில் பள்ளியின் மழலையர்கள் கேரளாவின் பாரம்பரிய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக அழகான பாரம்பரிய உடை அணிந்தும், உணவு வகைகளை அலங்கரித்தும், வண்ண மலர்களால் கோலம் அலங்கரிக்கபட்டும் உற்சாகமாக கொண்டாடினர். மேலும் கேரள கதகளியும், அழகான திருவாதிரை நடனம் ஆடியும் மிகச்சிறப்பாக ஓணம் திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
பள்ளி முதல்வர் வெற்றிவேல் செல்வம் விழாவில் கலந்து கொண்ட மழலையர்களை பாராட்டி ஓணம் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார். மேலும் ஒருங்கிணைப்பாளர்கள் ராஜ்குமார், உமாதேவி, ஏஞ்சலினா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு குழந்தைகளை உற்சாகப்படுத்தி விழாவினை சிறப்பித்தனர். இதே போல் ஸ்ரீராம் பள்ளியிலும் ஓணம் பண்டிகை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆசிரியர்கள் பூக்கோலம் இட்டு மாணவிகள் கேரளத்து பெண்கள் போல் ஆடை அணிந்து உற்சாகத்தோடு ஓணம் பண்டிகையை கொண்டாடினர். பள்ளி முதல்வர் சாரதி மகாலிங்கம் ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் புவனேஸ்வர், மணிமேகலை ஆகியோர் தலைமையில் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது. இவ்விழாவில் ஒருங்கி ணைப்பாளர்கள் குருமூர்த்தி, பிரவீணா ஆகியோர் கலந்துக்கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.