search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியாம்பட்டி சப்தகிரி பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா
    X

    விழாவில் கல்லூரி துணைத் தலைவர் எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன் பேசிய போது எடுத்த படம்.

    பெரியாம்பட்டி சப்தகிரி பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா

    • பெரியாம்பட்டி சப்தகிரி பொறியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கியது
    • முன்னாள் எம்.பி.யுமான எம்.ஜி. சேகர் தலைமை தாங்கினார்.

    தருமபுரி பெரியாம்பட்டி–யில் உள்ள சப்தகிரி பொறி–யியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு கள் தொடக்க விழா கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    விழாவுக்கு சப்தகிரி, பத்மாவதி, பீ.ஜீ. கல்வி நிறுவனங்களின் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான எம்.ஜி. சேகர் தலைமை தாங்கினார். கல்லூரி துணைத் தலைவர் எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் வெங்கடரத்தினம் வரவேற்று பேசினார்.

    கே.எஸ்.ஆர். கல்லூரி பேராசிரியர் தமிழரசன், தருமபுரி அகில இந்திய வானொலி நிலைய அலு வலர் லீலா வினோதன் என்கிற அதியமான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி முதலாமாண்டு வகுப்புகளை தொடங்கி வைத்து பேசினர்.

    நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் சக்திவேல், பேராசிரியர் அருண், சேர்க்கை அலுவலர்கள் வேலு, முனுசாமி, கணக்கு அலுவலர் சின்னசாமி மற்றும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் கல்லூரி செயலாளர் ராஜா நன்றி கூறினார்.

    Next Story
    ×