என் மலர்
உள்ளூர் செய்திகள்

அய்யா வைகுண்ட சுவாமி தத்துவ தவ தருமபதியில் திருக்காட்சி திருவிழா நடந்த போது எடுத்தபடம்.
பாளை மார்க்கெட் அய்யா வைகுண்ட சுவாமி தத்துவ தவ தருமபதி திருக்காட்சி திருவிழா
- திருக்காட்சி திரு விழா இன்று தொடங்கி 11 நாட்கள் நடைபெறுகிறது.
- 10-ம் திருநாளில் சாமிதோப்பு சிவசந்திரனின் அய்யாவழி அருளிசை வழிபாடு நடைபெறுகிறது.
நெல்லை:
பாளை மார்க்கெட் செல்வ விநாயகர் கோவில் தெரு அய்யா வைகுண்ட சுவாமி தத்துவ தவ தர்மபதி யில் 76-வது திருக்காட்சி திரு விழா இன்று தொடங்கியது.
இவ்விழா இன்று தொடங்கி 11 நாட்கள் நடைபெறுகிறது.
முதல் நாள் திருவிழா வையொட்டி இன்று அதி காலையில் அய்யாவுக்கு பால் பணிவிடை, திருக்கொடி பட்டம் வீதி வலம் வந்து திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து உகப்பெருக்கு பணிவிடை, சூரிய வாகனத்தில் அய்யா பவனி, ஊர் தர்மம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சி கள் நடை பெற்றது. 2-ம் நாள் திருநாளில் குமரி மாவட்டம் நாஞ்சில் அசோகன் சின்னத்தம்பி தலைமையிலான அய்யாவழி இசை பட்டிமன்றம் நடை பெறுகிறது. அதனை தொடர்ந்து 8-ம் திருநாளில் வெள்ளை குதிரை வாகனத்தில் அய்யா பவனி வந்து கலி வேட்டையாடல் உகப் பெருக்கு பணிவிடை ஏக மகா சிறப்பு அன்ன தர்மம் ஆகியவை நடைபெறுகிறது .
10-ம் திருநாளில் குமரி மாவட்டம் சாமிதோப்பு சிவசந்திரனின் அய்யாவழி அருளிசை வழிபாடு நடைபெறுகிறது.
அதைதொடர்ந்து 11-ம் திருநாளில் குமரி மாவட்டம் சுண்டப்பற்றி விளை ஜெகநாதனின் அய்யா வழி வில்லிசை கச்சேரி ஆகியவை நடைபெறுகிறது.இவ் விழாவி ற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.