search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறித்த வாலிபர்கள்- 2 கி.மீ. தூரம் விரட்டி சென்று மடக்கிய பொதுமக்கள்
    X

    வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறித்த வாலிபர்கள்- 2 கி.மீ. தூரம் விரட்டி சென்று மடக்கிய பொதுமக்கள்

    • பள்ளிபாளையம் போலீசுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
    • மல்லிகா பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே அன்னை சத்யாநகர் பகுதியில் குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் 2-வது மாடியில் மல்லிகா, என்பவர் தனியாக வசித்து வருகிறார். இவர் நேற்று மதியம் சுமார் 4 மணி அளவில் வீட்டில் சுடு தண்ணீர் வைத்து கொண்டிருந்தார்.

    அப்போது 2 வாலிபர்கள் மல்லிகா வீட்டிற்குள் புகுந்து மல்லிகாவை தாக்கி அடுப்பில் வைத்திருந்த சுடு தண்ணீரை எடுத்து மல்லிகா மேல் ஊற்றி கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்தனர். மல்லிகாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வருவதை பார்த்த 2 வாலிபர்களும் தப்பி ஓடினர்கள். பொது மக்கள் அனைவரும் சேர்ந்து அவர்களை விரட்டி சென்றனர். சுமார் 2 கி.மீ துாரம் விரட்டி சென்று காட்டூர் பகுதியில் 2 பேரையும் பிடித்து, தர்ம அடி கொடுத்து கயிற்றில் கட்டினார்கள்.

    இது குறித்து பள்ளிபாளையம் போலீசுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்ததும் பொது மக்கள் பிடித்து வைத்திருந்த 2 பேரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். சுடு தண்ணீர் ஊற்றியதில் படுகாயமடைந்த மல்லிகா பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    போலீஸ் விசாரணையில் பிடிப்பட்டவர்கள் துாத்துக்குடியை சேர்ந்த அப்துல் (21), சாந்தகுமார் (21), என தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 15 பவுன் நகை மீட்கப்பட்டது. மேலும் இந்த நகை பறிப்பில் தொடர்ப்புள்ள மல்லிகாவின் பக்கத்து வீட்டை சேர்ந்த ஐஸ்வரியா (24), மணிமேகலை (30), ஆகிய 2 பெண்களையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×