search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊராட்சி மன்ற துணைத்தலைவரின் கணவர் மர்ம சாவு
    X

    மர்மமாக இறந்த விஸ்வ நாதன்.

    ஊராட்சி மன்ற துணைத்தலைவரின் கணவர் மர்ம சாவு

    • இவரது மனைவி கவிதா ஒன்னப்பகவுண்டனஅள்ளி ஊராட்சி மன்றத் துணைத்தலைவராக உள்ளார்.
    • தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்று இண்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பென்னாகரம், ஜன.3

    தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாங்காப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னராஜ் என்பவரின் மகன் விஸ்வநாதன் (வயது 36).

    இவர் தக்காளி மார்க்கெட்டில் சரக்கு வேன் டிரைவராக வேலை செய்து வந்தார்.

    இவரது மனைவி கவிதா ஒன்னப்பகவுண்டனஅள்ளி ஊராட்சி மன்றத் துணைத்தலைவராக உள்ளார். இந்நிலையில் இண்டூர் அருகே உள்ள சோம்பட்டி கிராமத்தில் உள்ள விஸ்வநாதனின் நண்பரான பெரியண்ணன்(33) என்பவரது வீட்டிற்குச் சென்ற விஸ்வநாதன் அங்கு மின்விசிறி கொக்கியில் புடவையால் தூக்கு மாட்டிக்கொண்டார்.

    அந்த வீட்டிலிருந்த குழந்தைகள் தகவல் தெரிவித்ததன் பேரில் விஸ்வநாதனை ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் விஸ்வநாதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    நண்பர் வீட்டில் வேன் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்று இண்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×