search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னம் அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்திலிருந்த நகை திருட்டு
    X

    குன்னம் அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்திலிருந்த நகை திருட்டு

    • குன்னம் அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்திலிருந்த நகை திருட்டு போனது
    • மேலும் போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    குன்னம்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள நன்னை கிராமத்தில் ஆனந்தாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ளது. இந்த கோவிலில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இந்த கோவிலில் வழக்கம் போல் பூஜை நடத்துவதற்காக அதே கிராமத்தை சேர்ந்த பூசாரி தர்மலிங்கம் என்பவர் கோவிலை திறந்துள்ளார். அப்போது கோவிலில் உள்ள தகர டப்பாவினால் ஆன உண்டியல் உடைக்கபட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.மேலும் அம்மன் கழுத்தில் இருந்த ஒன்றறை பவுன் நகைகளை காணவில்லை.

    உண்டியலில் இருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் அம்மன் கழுத்தில் இருந்த ஒன்றறை பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து பூசாரி தர்மலிங்கம் குன்னம் போலீசில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்ம ஆசாமிகள் கோவில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் நகைகளை திருடிசென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×