என் மலர்
உள்ளூர் செய்திகள்

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பாலையூர் வேதபுரீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
- வேதபுரீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது
- 108 வட மாலை சாத்தி தீபாதாரணை காண்பிக்கப்பட்டது
பெரம்பலூர் :வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூர் கிராமத்தில் வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் வேத நாராயண பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. ஆஞ்சநேயர் சன்னதியில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, 108 வட மாலை சாத்தி தீபாதாரணை காண்பிக்கப்பட்டது. மேலும் ஆஞ்சநேயர் பிறந்த நாளை பக்தர்கள் 10 கிலோ எடையில் பெரிய அளவிளான கேக் வெட்டி அதனை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story