என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![பெரம்பலூர் பகுதியில் - 7 இடைநிற்றல் மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு பெரம்பலூர் பகுதியில் - 7 இடைநிற்றல் மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/11/26/1987149-students.webp)
பெரம்பலூர் பகுதியில் - 7 இடைநிற்றல் மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அறிவுரை கூறி அழைத்து வந்து செஞ்சேரியில் செயல்பட்டுவரும் உண்டு உறைவிடப் பள்ளியில் 5ம் வகுப்பில் சேர்த்தனர்.
- சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பில் சேர்த்து கல்வி பயில நடவடிக்கை எடுத்தார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே கவுள்பாளையத்தை சேர்ந்த மருதமுத்து மகன் சரவணன் (வயது 10), தந்தையை இழந்த இவர் பள்ளிக்குச் செல்லாமல், படிப்பை நிறுத்தி உள்ளார். இது குறித்த தகவலறிந்த கலெக்டர் கற்பகம் உத்தரவின்பேரில் உதவி திட்ட அலுவலர் ஜெயசங்கர் மேற்பார்வையில், ஆசிரியர் பயிற்றுநர் ரமேஷ் கவுள்பா ளையம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், பட்டதாரி ஆசிரியர் துரைசாமி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் உஷ்மான் அலி, உதவி ஆசிரியர் அகிலாதேவி ஆகியோருடன் குழுவாக கவுள்பாளையம் கிராமத் திற்கு சென்றனர். அங்கு பள்ளிக்கு செல்லாமல் இருந்த சரவணனை சந்தித்து அறிவுரை கூறி அழைத்து வந்து செஞ்சேரியில் செயல்பட்டுவரும் உண்டு உறைவிடப் பள்ளியில் 5ம் வகுப்பில் சேர்த்தனர். இதே போல் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராமல் இருந்த 5 மாணவர்களையும் பள்ளிக்கு அழைத்து வந்தனர்.
மேலும் அய்யலூர் பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளியான சோலைமுத்துவின் மகன் பாரதி (14), தாயில்லாத குழந்தையான இவர் பள்ளிக்குச் செல்லாமல் வேலைக்கு சென்றார். தகவறிந்த ஆசிரியர் பயிற்றுநர் ரமேஷ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருடன் சென்று மாணவன் பாரதியை மீட்டு சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பில் சேர்த்து கல்வி பயில நடவடிக்கை எடுத்தார்.