என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
பெரம்பலூர் புதிய தமிழகம் கட்சி சார்பில் மது ஒழிப்பு விழிப்புணர்வு கையேடு விநியோகம்
Byமாலை மலர்26 Jun 2023 12:57 PM IST
- பெரம்பலூர் புதிய தமிழகம் கட்சி சார்பில் மது ஒழிப்பு விழிப்புணர்வு கையேடு விநியோகிக்கபட்டது
- நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் அருண்குமார் தலைமை வகித்தார்.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் மது ஒழிப்பு விழிப்புணர்வு கையேடு விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பெரம்பலூர் புது பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் அருண்குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் குணா கலந்துகொண்டு புதிய தமிழகம் கட்சி நிறுவனர் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எழுதிய டாஸ்மாக் குடியின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்போம், மது இல்லா புதிய தமிழகம் படைப்போம் என்ற விழிப்புணர்வு கையேட்டினை விநியோகித்தார். இதில் ஒன்றிய செயலாளர்கள் கபிலன், சதீஷ், சிவசூரியன், இளைஞரணி பொறுப்பாளர் விஜய்பிரபு, மாவட்ட இணையதள பிரிவு அமைப்பாளர் பிரகாஷ் , மணிகண்டன், வினோத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story
×
X