என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி சிறப்பிடம் ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்](https://media.maalaimalar.com/h-upload/2023/05/09/1878308-ramakrishna.webp)
ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி சிறப்பிடம் பிடித்துள்ளது
- பிளஸ் -2 பொதுத்தேர்வில் சிறப்பு
பெரம்பலூர்:
பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ்- 2 அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.மாணவி ரிபாயா 600க்கு 592 மதிப்பெண்னும், மாணவர் அருண்சங்கர், மாணவி அபிராமவல்லி 588-ம், மாணவர் அபிஷேக் 587 என மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். வேதியியல் பாடத்தில் 13 பேரும், உயிரியல் பாடத்தில் 12 பேரும், இயற்பியல், கணிதம், கணக்குபதிவியியல் ஆகிய பாடங்களில் தலா 2 பேரும், வணிக கணிதம் பாடத்தில் 7 பேரும், கணினி பயன்பாடு பாடத்தில் 5 பேரும் ஆகியோர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.மேலும் 580 மதிப்பெண்களுக்கு மேல் 9 மாணவர்கள், 575க்கு மேல் 75 மாணவர்கள், 550க்கு மேல் 97 மாணவர்கள், 500க்கு மேல் 358 மாணவர்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்களையும் ஸ்ரீராமகிருஷ்ணா கல்விநிறுவன தலைவர் சிவசுப்ரமணியம், செயலாளர் விவேகானந்தன் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர். நிகழ்ச்சியின்போது முதல்வர் கலைச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.