என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம்

- பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம் நடந்தது
- செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் (பொ) பொன்னுதுரை தலைமை வகித்தார்.பள்ளி மேலாண்மை குழு தலைவி கவிதா, தொழிற்கல்வி ஆசிரியர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நிதிதிரட்டி கட்டிய கட்டடம் இடியும் தருவாயில் உள்ளதால் அந்த கட்டிடத்தை அகற்றுதல், ஆஸ்பெஸ்டாஸ் கட்டிடத்தை புனரமைப்பு செய்து பயன்பாட்டுக் கொண்டு வருதல், சீரமைப்பு செய்யப்பட்ட ஓட்டு கட்டிடத்தை மாணவர்கள் பயன்பாடு கொண்டு வருதல், பள்ளி கட்டிட இட அமைப்புக்கான ரூ.9 லட்சம் நிதியும், பள்ளி மாணவர்களின் குடிநீர் திட்டத்திற்கான ரூ 3 லட்சம் நிதியும் இந்தப் பள்ளிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.இந்த நிதியை முறையான வகையில் பயன்படுத்தி திட்டங்களை நிறைவேற்றிட வேண்டுமெனவும், இன்று நடைபெறும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை தீர்மானமாக நிறைவேற்ற வேண்டுமென இக்கூட்டத்தில் பேசினார்.
தொடர்ந்து பள்ளியில் செயல்படும் நான் முதல்வன் திட்டம் பற்றி நீலாவதி ஆசிரியர் விரிவாக பேசினார். முடிவில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டது. முன்னதாக உதவி தலைமை ஆசிரியர் லதா வரவேற்றார். நிறைவாக ஆசிரியை பாஸ்கர் நன்றி கூறினார்.