என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
By
மாலை மலர்26 Sept 2022 1:01 PM IST

- சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
- மகாளய அமாவாசையையொட்டி நடந்தது
பெரம்பலூர்
புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. மகாளய அமாவாசை என்பதால் கோவிலுக்கு பெரம்பலூர் மாவட்ட பக்தர்கள் மட்டுமல்லாமல், வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது திரளாக கூடியிருந்த பக்தர்கள் அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். கோவிலில் இன்று (திங்கட்கிழமை) முதல் நவராத்திரி விழா தொடங்குகிறது.
Next Story
×
X