என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
குணமாகிய பெண் 5½ ஆண்டுகளுக்கு பிறகு கணவரிடம் ஒப்படைப்பு
Byமாலை மலர்18 March 2023 2:36 PM IST
- மனநிலை பாதிக்கப்பட்டிருந்தவர்கள் குணமாகியதை தொடர்ந்து கணவரிடம் ஒப்படைக்கப்பட்டார்
- போலீசார் விசாரணைக்கு பின்னர் ஒப்படைப்பு
பெரம்பலூர்
பெரம்பலூர் ரோவர் ஆர்ச் அருகே கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 11-ந்தேதி மதியம் மனநிலை பாதிக்கப்பட்ட சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சுற்றித்திரிந்தார். இதனை கண்ட பெரம்பலூர் போலீசார் அவரை மீட்டு ஒரு கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில் தற்போது அவர் நலமுடன் இருந்ததால், அவரை பற்றி தகவலை போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அயன்பேரையூரை சேர்ந்த துரை அரசன் மனைவி ஜெயா என்பது தெரியவந்தது. இதையடுத்து ஜெயாவை போலீசார் அவரது கணவரிடம் நேற்று ஒப்படைத்தனர்
Next Story
×
X