என் மலர்
உள்ளூர் செய்திகள்

விவசாயத் தோட்டத்தில் பெண் அடித்துக் கொலை

- விவசாயத் தோட்டத்தில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்
- கணவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ள மருவத்தூர் கொளக்காநத்தம் கிழக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 65). இவரது மனைவி விஜயலட்சுமி (55). இந்த தம்பதியருக்கு சுரேஷ்(38)என்ற ஒரு மகன் உள்ளார்.
இவர்கள் கூட்டாக தங்களது தோட்டத்தில் சோளம் மற்றும் பருத்தி பயிரிட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் கண்ணன் அவரது மனைவி விஜயலட்சுமி, மகன் சுரேஷ் ,மருமகள் பத்மாவதி ஆகிய நான்கு பேரும் மாடுகளை ஓட்டிக்கொண்டு விவசாயத் தோட்டத்துக்கு சென்றனர்.
அடித்துக் கொலை
பின்னர் மதியம் 12:30 மணிக்கு சுரேஷ் தனது மனைவி பத்மாவதி உடன் மதிய சாப்பாட்டுக்கு வீடு திரும்பினார். பின்னர் மாலை 4.30 மணி அளவில் தோட்டத்திற்கு சென்றார்.
அப்போது அவரது தாயார் விஜயலட்சுமி தலையில் பலத்த ரத்தக்காயத்துடன் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்தபோதிலும் இன்று(சனிக்கிழமை) அதிகாலை 5 மணி அளவில் விஜயலட்சுமி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் கொலை வழக்கு பதிவு பதிவு செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட விஜயலட்சு மியின் பின்பக்க தலையில் இரும்பு கம்பியால் தாக்கிய தடயங்களை போலீசார் கண்ட றிந்துள்ளனர். ஆனால் கொலையாளி மற்றும் கொலைக்கான காரணம் குறித்து எதுவும் உறுதி செய்யப்படவில்லை. கொலை செய்யப்பட்ட விஜயலட்சுமி அணிந்திருந்த தாலிச் செயின் மற்றும் கம்மல்கள் அப்படியே இருந்தன. எனவே கொள்ளை யர்களுக்கு தொடர்பு இல்லை என்பதை உறுதி செய்துள்ளனர். அதனால் விசாரணையின் கோணம் மாறி உள்ளது.
சம்பவம் நடந்தபோது விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் உடனிருந்து உள்ளார். அவரிடம் விசாரணை நடத்திய போது நான் அருகாமையில் உள்ள காட்டில் மாடுகளை மேய்த்துக் கொண்டி ருந்ததாக கூறியுள்ளார். இருப்பினும் தொடர்ந்து அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடந்து வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்க ப்பட்டுள்ளது தோட்டத்தில் பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.