என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
அகரம்சீகூர் பகுதியில் மணல் திருடியவர் கைது
Byமாலை மலர்15 Sept 2023 12:22 PM IST
- திருட்டுக்கு பயன் படுத்தப்பட்ட டிப்பர் லாரி யை பறிமுதல் செய்து விசாரணை
- ரகசிய தகவலின் அடிப்படையில் மங்களமேடு காவல்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர்
அகரம்சீகூர், செப்.15-
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம் சீகூரில் உள்ள வெள்ளாற்று பகுதியில் தொடர்ந்து மணல் திருட்டு நடந்து வருவதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மங்களமேடு காவல்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அகரம்சீகூர் வெள்ளாற்றில் லாரியில் மணல் ஏற்றி கொண்டிருப்பது தெரிந்தது. மணல் ஏற்றிக் கொண்டு இருந்தவரை பிடித்து விசாரித்த போது ஒகளுர் கிராமத்தை சேர்ந்த விஜயகாந்த் என்பவருக்கு சொந்தமான டிப்பர் லாரியில் அதே ஊரை சேர்ந்த வெங்கடேஷ் (30) என்பவர் அரசு அனுமதி இல்லாமல் கள்ளத்தனமாக மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை யடுத்து மங்களமேடு காவல்துறையினர் வெங்கடேசனை கைது செய்து, மணல்
திருட்டுக்கு பயன் படுத்தப்பட்ட டிப்பர் லாரி யை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
X