search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில்  ஆங்கிலத்துறை சார்பாக சிறப்பு கருத்தரங்கு
    X

    பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் ஆங்கிலத்துறை சார்பாக சிறப்பு கருத்தரங்கு

    • பைசு ஹள்ளியில் உள்ள பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கிலத்துறை சார்பாக சிறப்பு கருத்தரங்கு நடந்தது.
    • முன்னதாக நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரையும் இரண்டாம் ஆண்டு மாணவி பாத்திமா வரவேற்றார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பைசு ஹள்ளியில் உள்ள பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கிலத்துறை சார்பாக சிறப்பு கருத்தரங்கு நடந்தது.

    இதில் மதுரை தியாகராஜர் கல்லூரி ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் வரதராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இலக்கிய கோட்பாடுகளை ஆராய்ச்சியில் பயன்ப டுத்தும் முறை பற்றி விரிவாக பேசினார்.

    ஆராய்ச்சி மைய இயக்குனர் மோகனசுந்தரம் தலைமை யில் நடைபெற்ற விழாவில் ஆங்கிலத்துறை தலைவர் கோவிந்தராஜ் பேசினார்.

    முன்னதாக நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரையும் இரண்டாம் ஆண்டு மாணவி பாத்திமா வர வேற்றார். இறுதியாக முதலாம் ஆண்டு மாணவி ரூபிணி நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வை நிர்மலா தொகுத்து வழங்க நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பழனி சாமி, பெருமாள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×