என் மலர்
உள்ளூர் செய்திகள்

போதைப்பொருளாக பயன்படுத்தப்படும் மாத்திரைகள்
- மாத்திரைகளை போதைப்பொருட்களாக பயன்படுத்தும் வழக்கம் அதிகரித்து வருகிறது.
- விற்பனை செய்யக்கூடாது என்று மருந்து கடை உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
தருமபுரி,
மருந்து கடைகளில் விற்கப்படும் வலி நிவாரண மாத்திரைகள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு வழங்கப்ப டும் மாத்திரைகளை போதைப்பொருட்களாக பயன்படுத்தும் வழக்கம் அதிகரித்து வருகிறது.
எனவே மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் இது போன்ற மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது என்று மருந்து கடை உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஆனால் மற்றொரு புறம் ஆன்லைன் மூலம் இந்த மாத்திரைகளை சுலபமாக போதை ஆசாமிகள் வாங்கி பயன்படுத்துகின்றனர்.
ஆன்லைனில் மாத்திரை களை வாங்குவதற்கு அரசு கட்டுப்பாடுகளை விதித்தால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும் என்று மருந்து கடை உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story