search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போடி: அதிகாரிகள் சோதனையில் சிக்கிய பிளாஸ்டிக், புகையிலைப்பொருட்கள்
    X

    கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    போடி: அதிகாரிகள் சோதனையில் சிக்கிய பிளாஸ்டிக், புகையிலைப்பொருட்கள்

    • மீனாட்சிபுரம் மற்றும் பூதிப்புரம் பேரூராட்சி பகுதிகளில் தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • சுமார் 10 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி ஒன்றியத்துக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் மற்றும் பூதிப்புரம் பேரூராட்சி பகுதிகளில் தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் ராகவன் தலைமையில் போடி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சரண்யா மற்றும் அலுவலர்கள் பூதிப்புரம், மீனாட்சிபுரம் பேரூராட்சி அலுவலர்கள் பங்கேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

    உணவு விடுதிகள் டீக்க டைகள், பெட்டிக்கடைகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகளில் மேற்கொண்ட ஆய்வில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டு கைப்பற்ற ப்பட்டது.

    சுமார் 1½ கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்ற ப்பட்டது. மேலும் சுமார் 10 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

    இது மட்டுமின்றி பல்வேறு பெட்டிக்கடைகள் மற்றும் உணவு விடுதிகளில் மேற்கொண்ட ஆய்வில் தரமற்ற எண்ணையில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் பயன்பாட்டு காலம் முடிந்து விற்பனைக்கு தரமற்ற நிலையில் வைக்கப்பட்டி ருந்த உணவுப் பொருட்கள் கைப்பற்றி அழிக்கப்பட்டது.

    இதுபோன்ற பொரு ட்களை விற்ற வியாபாரி களிடம் இனியும் இது போன்று தொடர்ந்து நடந்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரித்து ரூ.9 ஆயிரத்து 500 வரை அபராதம் வசூலித்தனர்.

    Next Story
    ×