என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![மருந்து கடைகளில் போலீசார், மருத்துவ அதிகாரிகள் சோதனை மருந்து கடைகளில் போலீசார், மருத்துவ அதிகாரிகள் சோதனை](https://media.maalaimalar.com/h-upload/2022/06/24/1718237-untitled-1.jpg)
மருந்து கடைகளில் போலீசார் சோதனை நடத்திய காட்சி.
மருந்து கடைகளில் போலீசார், மருத்துவ அதிகாரிகள் சோதனை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- வறட்டு இருமல் மற்றும் தொண்டை வலிக்கு பரிந்துரைக்கப்படும் டானிக் அதிக அளவில் விற்பனையாவதாக, சுகாதாரத்துறை மருந்து கண்காணிப்பு பிரிவுக்கு புகார்.
- ஒரே நேரத்தில் 5 மி.லி.,க்கு அதிகமாக உட்கொண்டால், போதைதருவது போல் இருக்கும்.
திருப்பூர் :
இருமலுக்கு பரிந்துரைக்கப்படும் 'டானிக்'கை,சிலர் போதைப்பொருள்போன்று பயன்படுத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, திருப்பூரில் உள்ள மருந்துக்கடைகளில் அதிகாரிகள் திடீர்ஆய்வு மேற்கொண்டனர்.வறட்டு இருமல் மற்றும் தொண்டை வலிக்கு பரிந்துரைக்கப்படும் டானிக் திருப்பூரில் அதிக அளவில் விற்பனையாவதாக, சுகாதாரத்துறை மருந்து கண்காணிப்பு பிரிவுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து,அவிநாசி ரோடு, பி.என்.,ரோடு மற்றும் பல்லடம்ரோடு தென்னம்பாளையம், காட்டுவளவு ஆகியபகுதிகளிலுள்ள மருந்துகடைகளில், தெற்குபோலீஸ் உதவி கமிஷனர்கார்த்திகேயன், மாவட்டமருந்துகள் கள ஆய்வாளர்கள் ராமசாமி, மகாலட்சுமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்துபோலீஸ் உதவி கமிஷனர் கார்த்திகேயன் கூறுகையில், "இருமலுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் குறிப்பிட்ட மருந்து, கடைகளில் எவ்வளவு இருப்பு வைத்துள்ளனர். பில்களை பராமரிக்கின்றனரா என ஆய்வுமேற்கொள்ளப்பட்டது.யாராவது மீண்டும் மீண்டும் அதே மருந்தை கேட்டுவந்தாலோ, கூடுதலாகவாங்க முனைந்தாலோ தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
மருந்துகள் கள குழுவினர் கூறுகையில்,இந்தமருந்து, டாக்டர்கள் பரிந்துரைக்கக்கூடியது தான்.ஆனால் ஒரே நேரத்தில் 5 மி.லி.,க்கு அதிகமாகஉட்கொண்டால், போதைதருவது போல் இருக்கும். இந்த போதைக்காக யாராவது கூடுதலாக மருந்துகள் வாங்கி சென்று உள்ளனரா எனதொடர்ந்து ஆய்வு நடத்தப்படும்என்றனர்.