என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![சென்னையில் வரும் 25-ம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை சென்னையில் வரும் 25-ம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை](https://media.maalaimalar.com/h-upload/2023/03/22/1853750-dronn.webp)
சென்னையில் வரும் 25-ம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சென்னையில் ஜி 20 மாநாடு கருத்தரங்கம் நடைபெறுகிறது.
- இதையொட்டி வரும் 25ம் தேதி வரை டிரோன்கள் பறக்க போலீசார் தடை விதித்தனர்.
சென்னை:
இந்தியாவில் ஜி 20 மாநாடு வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் 2-வது கட்ட கருத்தரங்கு நிகழ்ச்சி வரும் வெள்ளி, சனிக்கிழமை ஆகிய 2 நாட்கள் கிண்டியில் உள்ள ஐ.டி.சி.கிராண்ட் சோழா ஓட்டலில் நடைபெற உள்ளது. இதில் 29 வெளிநாடுகள், 15 பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.
கருத்தரங்கு நடைபெறும் ஓட்டல், ரமடா பிளாசா, ஓட்டல் ஹப்ளீஸ், ஓட்டல் பார்க் ஹையாத் ஆகிய ஓட்டல்களில் தங்குகின்றனர். இவர்கள் தங்கியுள்ள ஓட்டல்கள், கருத்தரங்கு நடைபெறும் ஓட்டல் மற்றும் இவர்கள் செல்லும் வழித்தடங்களை சிவப்பு மண்டலமாக சென்னை போலீசார் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், வரும் 25-ம் தேதி வரை இப்பகுதிகளில் டிரோன்கள், இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறப்பதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.