என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொங்கல் பண்டிகை - திருப்பூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்
- வெளியூர் செல்லுவோர் வசதிக்காக மாநிலம் முழுவதும் 16 ஆயிரத்து 932 சிறப்பு பஸ்களை போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
- பஸ் நிலையங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு விட்டதால் இந்த முறை வழித்தட மாற்றம் இல்லை.
திருப்பூர் :
பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லுவோர் வசதிக்காக மாநிலம் முழுவதும் 16 ஆயிரத்து 932 சிறப்பு பஸ்களை போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. திருப்பூரில் இருந்து வெளி மாவட்ட தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.
இதற்காக திருப்பூரில் இருந்து அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கம் நேற்று இரவு முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:- மதுரை மார்க்கமாக செல்லும் பஸ்கள் கோவில்வழியில் இருந்தும், திருச்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள் புதிய பஸ் நிலையத்தில் இருந்தும், சென்னை, சேலம் பஸ்கள் மத்திய பஸ் நிலையத்தில் இருந்தும் இயங்கும்.பஸ் நிலையங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு விட்டதால் இந்த முறை வழித்தட மாற்றம் இல்லை. தற்போதுள்ள வழித்தடத்தில் மட்டும் பஸ்கள் இயங்கும். திருப்பூரில் இருந்து மதுரைக்கு 260, தேனி 76, திண்டுக்கல் 52, திருச்சி 150, கரூர் 38, சேலம் 96, சென்னை 11 என மொத்தம் 683 டிரிப் பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.