என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கடமலை-மயிலை ஒன்றியத்தில் சேதமடைந்த சாலையால் பொதுமக்கள் அவதி கடமலை-மயிலை ஒன்றியத்தில் சேதமடைந்த சாலையால் பொதுமக்கள் அவதி](https://media.maalaimalar.com/h-upload/2023/05/11/1879478-varusanadu1111052023af02jjjcmy.webp)
சேதமடைந்த சாலையை படத்தில் காணலாம்.
கடமலை-மயிலை ஒன்றியத்தில் சேதமடைந்த சாலையால் பொதுமக்கள் அவதி
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இரவு நேரங்களில் பொதுமக்கள் சேதமடைந்த சாலையில் விழுந்து காயமுற்று வருகின்றனர்.
- தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்தில் காந்திகிராமம், காமராஜபுரம், அரசரடி, இந்திராநகர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடமலை-மயிலை ஒன்றிய வனப்பகுதியை ஸ்ரீவில்லிபுதூர்-மேகமலை புலிகள் சரணாலயமாக அரசு அறிவித்தது. அறிவி ப்பிற்கு பின்னர் வனத்துறையினர் மலை க்கிராம பொது மக்களுக்கு பல்வேறு கட்டு ப்பாடுகளை விதித்துள்ளனர்.
மேலும் வனப்பகுதியை ஒட்டியுள்ள மலைக்கிரா மங்களில் சாக்கடை வடிகால், சிமெண்டு ரோடு உள்ளிட்ட எந்தவித வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ள அனுமதி வழங்குவதில்லை. இதனால் மலைக்கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாக எந்தவித வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் ஏற்கனவே கிராமங்களில் அமைக்கப்ப ட்டிருந்த சிமெண்டு சாலை மற்றும் சாக்கடை வடிகால்கள் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனை சீரமைப்பதற்கு கூட வனத்துறையினர் அனுமதி வழங்குவதில்லை என கூறப்படுகிறது. இதனால் மலைக்கிராம பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே வருசநாடு அருகே காந்திகிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சிமெண்டு சாலை தொடர் மழையின் காரணமாக சேதமடைந்தது. இதனை சீரமைக்க வனத்துறையினர் அனுமதி வழங்காத காரண த்தால் தற்போது சிமெண்டு சாலை முழுவதுமாக சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் இந்த சாலை வழியாக செல்லும் பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகிறது. அதேபோல இரவு நேரங்களில் பொதுமக்கள் சேதமடைந்த சாலையில் விழுந்து காயமுற்று வருகின்றனர். மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வனத்துறை அதிகாரி களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கடமலை-மயிலை ஒன்றிய மலைக்கிரா மங்களில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.