என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்5 Sept 2023 1:40 PM IST
- விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலக ரவுண்டானா அருகே தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தை சேர்ந்த நிர்வாகி பாலு தலைமை தாங்கினார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும். கூலி ரூ.600 வழங்கிட வேண்டும். நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை தமிழக அரசு அறிவித்தப்படி நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் கோரிக்கை தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனுவும் கொடுத்தனர்.
Next Story
×
X