என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கறம்பக்குடியில் பா.ஜ.க. நிர்வாகிகள் அறிமுக கூட்டம் கறம்பக்குடியில் பா.ஜ.க. நிர்வாகிகள் அறிமுக கூட்டம்](https://media.maalaimalar.com/h-upload/2022/07/03/1722962-img-20220703-wa0002.jpg)
கறம்பக்குடியில் பா.ஜ.க. நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பாரதிய ஜனதா கட்சி சார்பில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளின் அறிமுக கூட்டம் கறம்பக்குடி வடக்கு ஒன்றிய தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
- மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி பலர் மாவட்ட தலைவர் முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளின் அறிமுக கூட்டம் கறம்பக்குடி வடக்கு ஒன்றிய தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன், மாவ ட்ட பொதுச்செயலாளர் விஜயகுமார், மாவட்ட துணைத் தலைவர் ஜீவானந்தம் மாவட்ட துணைத் தலைவர் சிவசாமி,தெற்கு ஒன்றிய தலைவர் சேசு மாரிமுத்து ஆகியோா் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பொதுச்செயலாளர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார்.செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். புதிதாக பொறுப்பேற்ற அனைத்து நிர்வாகிகளுக்கும் நியமன கடிதம் வழங்கப்பட்டு சால்வை அணிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கலிராயன் விடுதி ஊராட்சியில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி பலர் மாவட்ட தலைவர் முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர். இறுதியாக ஒன்றிய பொருளாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினாா்.