என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிராமமக்களின் போட்டி போராட்டத்தால் மூடப்பட்ட டாஸ்மாக் கடை திறப்பு

- கிராமமக்களின் போட்டி போராட்டத்தால் மூடப்பட்ட டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது
- அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் நடவடிக்கை
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா வரிக்குடியில் புதிதாக மதுபானக்கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குமுளூர், வடக்கூர், கொங்கரான்வயல், கோணரியேந்தல் ஆகிய கிராம மக்கள் கடையை முற்றுகையிட திரண்டனர்.
அப்போது காவல்த்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பிறகு புதிதாக திறக்கப்பட்ட மதுபானக்கடை தற்காலிகமாக மூடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர் அதே பகுதியின் அருகே செயல்பட்டு வரும் மற்றொரு மதுபானக்கடையை முற்றுகையிட்டு, கடையை மூட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கலால் உதவி மேலாளர் கருப்பையா உள்ளிட்ட அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் 2 டாஸ்மாக் கடைகளையும் திறக்க வேண்டும் அல்லது 2 கடைகளையும் மூட வேண்டும் என்று கூறினர்.
இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் 2 கடைகளையும் போலீஸ் பாதுகாப்புடன் திறக்க அனுமதி அளித்தனர். பின்னர் 2 டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டு விற்பனை தொடங்கியது. இந்த சம்பவம் க ாரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.