என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தலைமை ஆசிரியர் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய கோரி மனு
- தலைமை ஆசிரியர் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய சங்கத்தினர் கலெக்டரிடம் முறையிட்டு மனு அளித்தனர்
- அனைத்து ஆசிரியர்களுக்கும் பணிபாதுகாப்பும் வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவர் மாதேஸ்வரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் சிவபிரகாசத்தை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தினர் சார்பில் மாநில தலைவர் தங்கமணி தலைமையில் சங்கத்தை சேர்ந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் நேற்று இரவு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மெர்சி ரம்யாவை சந்தித்து முறையிட்டு கோரிக்கை மனு அளித்தனர். தலைமை ஆசிரியர் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தினர். எதிர்கால சமுதாயம் நலன் கருதி வளமான சமுதாயம் அமைத்திட தலைமை ஆசிரியர் உள்பட அனைத்து ஆசிரியர்களுக்கும் பணிபாதுகாப்பும் வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.