என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கந்தர்வகோட்டைமுத்துமாரியம்மன் கோவில் திருவிழா கந்தர்வகோட்டைமுத்துமாரியம்மன் கோவில் திருவிழா](https://media.maalaimalar.com/h-upload/2023/08/21/1935547-save20230821102605.webp)
X
கந்தர்வகோட்டைமுத்துமாரியம்மன் கோவில் திருவிழா
By
மாலை மலர்21 Aug 2023 12:09 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கந்தர்வகோட்டைமுத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது
- ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டைமுத்துமாரியம்மன் கோவில் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் வருடம் தோறும் மண்டக படித்தார்களா திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். .அதேபோல் இந்த ஆண்டு ஆவணி முதல் ஞாயிறு திருவிழாவை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மேலும் பால்குடம் எடுத்தும் தொட்டில் காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் மாலை பூத்தட்டு மற்றும் முளைப்பாரி எடுத்தல் அது விமர்சையாக நடைபெற்றது. இரவு 8 மணி அளவில் அம்பாள் திருவீதி உலா அதிர்வேட்டு முழங்க மேலதாளங்களுடன் நடைபெற்றது..விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டுச் சென்றனர்.
Next Story
×
X