search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கறம்பக்குடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் திறப்பு
    X

    கறம்பக்குடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் திறப்பு

    • கறம்பக்குடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் திறக்கப்பட்டது
    • நீதிமன்றத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி முன்னிலையில் ஐகோர்ட் தலைமை நீதிபதி ( பொறுப்பு) நீதியரசர் ராஜா திறந்து வைத்தார்.

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா 39 ஊராட்சிகளை உள்ளடக்கிய தாலுகாவாகும். இங்கு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அதற்கான பணிகளை செய்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் புதுக்கோட்டையில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கறம்பக்குடி மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி முன்னிலையில் ஐகோர்ட் தலைமை நீதிபதி ( பொறுப்பு) நீதியரசர் ராஜா திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, திருச்சி விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினரும் முன்னாள் அரசு வழக்கறிஞருமான கே.கே.செல்லபாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, சட்டமன்ற உறுப்பினர்கள், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் தவ பாஞ்சாலன், கறம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திர துரை மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டையில் நீதிமன்றத்தை திறக்கும் பொழுது கறம்பக்குடியில் உள்ள நீதிமன்றத்தில் கறம்பக்குடி பேரூராட்சி தலைவர் முருகேசன் தலைமையில் ஆத்மா கமிட்டி சேர்மன் முத்துகிருஷ்ணன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    Next Story
    ×