என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஆலங்குடியில் பகுதியில் 5 மணி நேர மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதி
- ஆலங்குடியில் பகுதியில் 5 மணி நேர மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்
- மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது.
ஆலங்குடி:
ஆலங்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து பொதுமக்களை வாட்டி வந்தது. மதிய நேரங்களில் பொதுமக்கள் வெயிலின் உக்கிரத்தை தாங்க முடியாமல் வீட்டுக்குள் முடங்கினர். இந்நிலையில் நேற்று இரவு திடீரென கடும் சூறாவளி காற்று வீசியது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் வாகனங்களை ஓட்ட முடியாமல் பெரும் அவதிக்குள்ளாயினர். இதனை தொடர்ந்து திடீரென மழை பெய்தது. சூறாவளி காற்றால் ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. இதனால் மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதனால் நேற்று இரவு 7 மணி அளவில் ஆலங்குடி பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சுமார் அரை மணி நேரத்தில் மழை நின்று விட்ட நிலையில் 5 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாயினர். இதனை தொடர்ந்து சுமார் 12 மணி அளவில் மின்சாரம் மீண்டும் வந்தது.