என் மலர்
உள்ளூர் செய்திகள்
வாராந்திர ரயிலை மீண்டும் இயக்க கோரிக்கை
- ராமேசுவரம்- செகந்திராபாத் இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயிலை மீண்டும் இயக்க கோரிக்கை எழுந்துள்ளது
- புதுக்கோட்டையை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருவண்ணாமலை, திருப்பதி, காளஹஸ்தி சென்று வர வசதியாக இருந்ததாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்
புதுக்கோட்டை,
தென் மத்திய ரெயில்வே மண்டலம் சார்பாக செகந்திராபாத்- ராமேசுவரம்- செகந்திராபாத் இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயிலாக கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரெயில் புதுக்கோட்டை, கும்பகோணம், திருவண்ணாமலை, காட்பாடி, திருப்பதி, குண்டூர் வழியாக இயக்கப்பட்டது. செகந்திராபாத்-ராமேசுவரம் சிறப்பு ரெயில் (வண்டி எண்-07685) ஒவ்வொரு வாரமும் செவ்வாய் இரவு 9.25 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டைக்கு புதன் இரவு 10.43 மணிக்கு வந்து ராமேசுவரம் அதிகாலை 3.10 மணிக்கு சென்றடைந்தது. மறுமார்க்கத்தில் ராமேசுவரம்-செகந்திராபாத் சிறப்பு ரெயில் (07686) ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டைக்கு வெள்ளி அதிகாலை 3.40 மணிக்கு வந்து செகந்திராபாத் சந்திப்புக்கு சனி அதிகாலை 7.10 மணிக்கு சென்றடைந்தது. இந்த ரெயில் புதுக்கோட்டையை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருவண்ணாமலை, திருப்பதி, காளஹஸ்தி சென்று வர வசதியாக இருந்தது. இந்த ரெயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 24-ந் தேதியுடன் இந்த சிறப்பு ரெயில் நிறுத்தப்பட்டது. இந்த ரெயிலை மீண்டும் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக ரெயில்வே நிர்வாகத்தினரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.