என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
கற்பித்தல் உபகரணங்கள் வழங்கும் விழா
By
மாலை மலர்13 Nov 2023 12:41 PM IST

- கந்தர்வகோட்டை அருகே கற்பித்தல் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது
- உதவித் திட்ட அலுவலர் கோவிந்தன் கற்பித்தல் உபகரணங்கைளை வழங்கி பேசினார்
கந்தர்வகோட்டை,
கந்தர்வகோட்டை ஒன்றிய வட்டார வளமைய இல்லம் தேடிக் கல்வி மையத்தில் தன்னார்வலர்களுக்கு கற்பித்தல் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கல்வி மாவட்ட உதவித் திட்ட அலுவலர் (தொடக்க கல்வி) கோவிந்தன் கற்பித்தல் உபகரணங்கைளை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிரகாஷ் வரவேற்று பேசினார்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீரப்பன், புதுக்கோட்டை மாவட்ட இல்லம் தேடிக் கல்வித் திட்ட மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கலையரசன் ஆகியோர் தன்னார்வலர்களை வாழ்த்தி பேசினார்கள்.
முடிவில் கந்தர்வகோட்டை இல்லம் தேடி கல்வித் திட்ட ஒன்றிய ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா நன்றி கூறினார்.
Next Story
×
X