என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![தேசிய சாலையில் கார் அடுத்தடுத்த வாகனத்தில் மோதி விபத்து தேசிய சாலையில் கார் அடுத்தடுத்த வாகனத்தில் மோதி விபத்து](https://media.maalaimalar.com/h-upload/2022/06/27/1719415-accident.jpg)
தேசிய சாலையில் கார் அடுத்தடுத்த வாகனத்தில் மோதி விபத்து
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தேசிய சாலையில் கார் அடுத்தடுத்த வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது
- 3 பேர் காயமடைந்தனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பெருமாநாடு அருகே மேலப்பழுவஞ்சியில் பெருமாநாடுலிருந்து புதுக்கோட்டை நோக்கிச் சென்ற கார் ஒன்று அதிவேகமாக சென்ற நிலையில் அடுத்தடுத்து இரண்டு இருசக்கர வாகனங்களில் மோதிவிட்டு பின்னர் சாலையோரத்தில் இருந்த மின்மாற்றியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், அந்த பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் விபத்து நடந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகியும் காவல்துறையினர் விபத்து நடந்த இடத்திற்கு வராததால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் புதுக்கோட்டை பெருமாநாடு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.