என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டை டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு மருத்துவமனையில் புறநோயளிகள் பிரிவு
- புதுக்கோட்டை டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு மருத்துவமனையில் புறநோயளிகள் பிரிவு திறக்கப்பட்டது
- அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு அரசு மருத்துவமனையில், புறநோயளிகள் பிரிவினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.
பின்னர் அமைச்சர் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு அரசு மருத்துவமனையில், புறநோயளிகள் பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டதை தொடர்ந்து புதுக்கோட்டை நகரில் இயங்கி வந்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, அறந்தாங்கிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதன்மூலம் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று வருவதில் கர்ப்பிணி பெண்களுக்கும், வயதானவர்களுக்கும் மிகவும் சிரமப்பட்டு வந்த சூழ்நிலையில், முதலமைச்சர் புதுக்கோட்டை டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு அரசு மருத்துவமனையில், புறநோயளிகள் பிரிவு தொடங்கிட உத்தரவிட்டார். அதனடிப்படையில் டாக்டர; முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு அரசு மருத்துவமனையில், புறநோயளிகள் பிரிவிற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் போர்க்கால அடிப்படையில் நிறைவு செய்யப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்மூலம் பொதுமக்களுக்குத் தேவையான சிகிச்சைகள் அளிக்கவும், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுவரும் நேரமும் மிச்சமாகும்.
எனவே பொதுமக்கள் அனைவரும் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு அரசு மருத்துவமனையில், புறநோயளிகள் பிரிவின் சேவையினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.