என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • 17 வயது சிறுமிக்கு திருமணம் நடந்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு.
    • திருமணமான சிறுமி, 2 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே வடக்கு காட்டுப்பட்டி பகுதியில் 17 வயது சிறுமிக்கு திருமணம் நடந்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சமூகநலத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அந்த சிறுமி, 2 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது

    இந்த விவகாரம் தொடர்பாக திருப்பதி (21), மூக்கன் (60), ராணி (50), முத்து (62) ஆகிய நால்வர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்தினர் திருமயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
    • பெருமாளை போலீசார் புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

    அரிமளம்:

    புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே ஒரு அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் 400-க்கும் மேற்பட்டவர்கள் படித்து வருகின்றனர். அந்த பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் பெருமாள் (வயது 58). இவர் அப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பொறுப்பையும் வகித்து வருகிறார். இந்த நிலையில் அவர், அந்த பள்ளியை சேர்ந்த மாணவிகள் 7 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகள் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழும அதிகாரி வசந்தகுமார், சமூக நலத்துறை அதிகாரி கோகுலபிரியா, பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) குமார், கே.புதுப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிபாபு, திருமயம் இன்ஸ்பெக்டர் பத்மா மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே இந்த சம்பவம் பற்றிய தகவல் அப்பகுதியில் பரவியதால் பொதுமக்கள் பள்ளி முன்பு திரண்டனர். இதையடுத்து பாதுகாப்பு பணிக்காக அரிமளம் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் அதிகாரிகள் தனித்தனியாக விசாரித்தனர். விசாரணையில் 7 மாணவிகளும், உதவி தலைமை ஆசிரியர் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினர். மாணவிகளின் வாக்குமூலத்தை வீடியோவாக அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர். இதற்கிடையே குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்தினர் திருமயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் உதவி தலைமை ஆசிரியர் பெருமாள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து அவரை நேற்று கைது செய்தனர்.

    பின்னர் அவரை புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

    இதனிடையே, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட ஆசிரியர் பெருமாளை சஸ்பெண்ட் செய்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். 

    • விளையாட்டு பயிற்சி அளிக்கும் போது, மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
    • பள்ளிக்கு விரைந்து சென்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள கிளிக்குடி பெருமாள் பட்டி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.

    இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு பெருமாள்பட்டியைச் சேர்ந்த கே. அடைக்கலம் (வயது44) என்பவர் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இவர் விளையாட்டு பயிற்சி அளிக்கும் போது, மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்த குமார், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சண்முகம், மாவட்ட கல்வி அலுவலர் ஜெயந்தி உள்ளிட்ட அதிகாரிகள் அந்தப் பள்ளிக்கு விரைந்து சென்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் அடைக்கலம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. அதைத் தொடர்ந்து அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் இலுப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அடைக்கலம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இது தொடர்பாக விசாரணை அதிகாரி ஒருவர் கூறும் போது,

    கைதான அடைக்கலம் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். விளையாட்டு பயிற்சியின்போது, பந்துகளை எடுத்துக் கொடுக்கும் சாக்கில் தங்களின் உடலை தொடுவதாகவும், மேலும் முகம் பார்த்து பேசாமல் உடலின் அங்கங்களை பார்த்து பேசுவதாகவும் 16-க்கும் மேற்பட்ட மாணவிகள் தெரிவித்தனர். இது குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது என்றார்.

    மணப்பாறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி தாளாளரின் கணவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

    இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில் அன்னவாசல் அருகே அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • லாரி உரிமையாளர் முருகானந்தத்தின் வீடு மற்றும் கடைகளிலும் சோதனை நடந்தது.
    • காவலில் எடுக்கப்பட்ட 5 பேர் இன்று கோர்ட்டில் ஆஜர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜகபர் அலி( வயது 58) அ.தி.மு.க. பிரமுகரும் சமூக ஆர்வலருமான இவர், திருமயம் பகுதியில் கல் குவாரிகளில் நடைபெறும் சட்டவிரோத கனிமவள கொள்ளையை தடுப்பதற்காக போராடி வந்தார்.

    மேலும் நீதிமன்றங்களிலும் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து கடந்த 17-ம் தேதி அவரை லாரி ஏற்றி கொலை செய்தனர்.

    இதுதொடர்பாக திருமயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கல்குவாரி உரிமையாளர்கள், ராசு ராமையா, ராசுவின் மகன் தினேஷ், லாரி உரிமையாளர் முருகானந்தம், டிரைவர் காசிநாதன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

    பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைதான 5 பேரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைவதைத் தொடர்ந்து, அவர்களை இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க உள்ளனர்.

    இதற்கிடையே ஜகபர் அலியின் மனைவி மரியம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், சில தினங்களுக்கு முன்பு ஜகபர் அலியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு தாசில்தார் முன்னிலையில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.

    இதையடுத்து நேற்று சிபிசிஐடி போலீசார் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் கைதான ராமையா மற்றும் ராசு ஆகியோருக்கு சொந்தமான துளையானூரில் உள்ள அவர்களுக்கு சொந்தமான கல் குவாரிகள், வீடுகள் மற்றும் திருமயத்தில் உள்ள ராசுவுக்கு சொந்தமான நகை அடமானக் கடை ஆகிய இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

    மேலும் திருமயத்தில் உள்ள லாரி உரிமையாளர் முருகானந்தத்தின் வீடு மற்றும் கடைகளிலும் சோதனை நடந்தது.

    இதில் குவாரிகள் மற்றும் அவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் கனிமவள முறைகேடு தொடர்பாக முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரணையை தீவிர படுத்த முடிவு செய்துள்ளனர்.

    • 2 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை புதுக்கோட்டை கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.
    • சி.பி.சி.ஐ.டி. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் குறித்து முதலில் வேங்கைவயல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற மாற்றப்பட்டது.

    2 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை புதுக்கோட்டை கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்துள்ளனர். இதில் வேங்கைவயலை சேர்ந்த 3 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு அவர்களது பெயர் இடம் பெற்றுள்ளது.

    இந்த நிலையில், வேங்கைவயல் வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை ஏற்கக்கூடாது என புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    குற்றம் சாட்டப்பட்டுள்ள முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் மூவர் சார்பில் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், புகார்தாரரை சரியாக விசாரிக்காமல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    குற்றப்பத்திரிகை நகல் வேண்டும். குற்றப்பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டதில், இந்த வழக்கு, பட்டியல் இனத்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வராததால், வழக்கை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்ற மனு மீதான விசாரணை நடந்து வந்தது.

    இந்த 2 வழக்குகளில் இரு தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி வசந்தி, வழக்கு மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

    இதை தொடர்ந்து இன்று காலை கோர்ட்டில் 2 வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

    அப்போது சி.பி.சி.ஐ.டி. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    மேலும் வேங்கைவயல் வழக்கு வன்கொடுமை வழக்கு இல்லை என கூறி புதுக்கோட்டை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-2 கோர்ட்டுக்கு மாற்றி நீதிபதி வசந்தி உத்தரவிட்டார்.

    • வேங்கைவயலை சேர்ந்த 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு அவர்களது பெயர் இடம் பெற்றுள்ளது.
    • புகார்தாரரை சரியாக விசாரிக்காமல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என வழக்கு.

    புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து முதலில் வேங்கை வயல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வழக்கில் குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்து உள்ளனர்.

    இதில் வேங்கைவயலை சேர்ந்த 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு அவர்களது பெயர் இடம் பெற்றுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். மேலும் உண்மை குற்றவாளிகளை கண்டறியவும், சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரியும் வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    வேங்கைவயல் வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்து உள்ள குற்றப்பத்திரிகையை ஏற்கக்கூடாது என புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    குற்றம் சாட்டப்பட்டுள்ள முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் மூவர் சார்பில் இந்த மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், புகார்தாரரை சரியாக விசாரிக்காமல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை நகல் வேண்டும். குற்றப்பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கின் விசாரணையை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தது. அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வேங்கைவயல் சம்பவம் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடு தடுப்பு சட்டத்தின் கீழ் வராது என சிபிசிஐடி வாதம் செய்தது. அதனைத் தொடர்ந்து வருகிற திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார்.

    • ஐந்து பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு.
    • 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி (வயது 58). அதிமுக பிரமு கரும் சமூக ஆர்வலருமான இவர் திருமயம் துளையானூர் பகுதியில் இயங்கும் கல் குவாரிகளில் நடைபெறும் முறை முறைகேடுகளுக்கு எதிராக போராடி வந்தார்.

    இதையடுத்து கடந்த 17-ந் தேதி ஜகபர் அலி லாரி ஏற்றி கொலை செய்யப் பட்டார்.

    இது தொடர்பாக திருமயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராசு, ராமையா ஆகிய 2 கல் குவாரி அதிபர்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர்.

    பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. க்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது. இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலை நடந்த இடம் மற்றும் குவாரி உள்ளிட்ட வழக்கு தொடர்பான பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    பின்னர் கைதான ஐந்து பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    அதன்படி புதுக்கோட்டை இரண்டாவது ஜூடீசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதில் ஒவ்வொருத்தரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

    நீதிமன்றம் அனுமதிக்கும் நாட்களில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.

    • உண்மை குற்றவாளிகளை கண்டறியவும், சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரியும் வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
    • சி.பி.சி.ஐ.டி. குற்றப்பத்திரிகையை ஏற்கக்கூடாது என புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து முதலில் வேங்கை வயல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வழக்கில் குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்து உள்ளனர்.

    இதில் வேங்கை வயலை சேர்ந்த 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு அவர்களது பெயர் இடம் பெற்றுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். மேலும் உண்மை குற்றவாளிகளை கண்டறியவும், சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரியும் வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    வேங்கைவயல் வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்து உள்ள குற்றப்பத்திரிகையை ஏற்கக்கூடாது என புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    குற்றம் சாட்டப்பட்டுள்ள முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் மூவர் சார்பில் இந்த மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், புகார்தாரரை சரியாக விசாரிக்காமல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை நகல் வேண்டும். குற்றப்பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த மனு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

    இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை பிப்.1-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    • பெரியார் சர்ச்சை தேவையில்லாதது. நாம் பேச வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது.
    • சீனா உருவாக்கியுள்ள AI கருவி உலகத்தையே தற்போது உலுக்கி வருகிறது.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பெரியாருக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசி வருவதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பேசிய காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், "பெரியார் சர்ச்சை தேவையில்லாதது. நாம் பேச வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது.

    சீனா உருவாக்கியுள்ள AI கருவி உலகத்தையே தற்போது உலுக்கி வருகிறது. பங்குசந்தைகளில் பல நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனில் பலருக்கு வேலையிழப்பு ஏற்படும் என்று கூறுகிறார்கள்.

    பொருளாதாரம், வேலையின்மை என அன்றாடம் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் உள்ளன. ஆனால், என்ன உணவு சாப்பிட வேண்டும், தனிமனித உரிமைகள் இவைகள்தான் சர்ச்சை ஆகின்றன

    நம் அரசியல் மேடை போகும் திசை மிகவும் வருத்தம் அளிக்கிறது. விஞ்ஞான ரீதியான, அறிவுபூர்வமான பொருளாதாரம் குறித்த விவாதங்கள் நடக்காமல் இருப்பது வேதனையாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.

    இதனிடையே, விஜயின் அரசியல் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு 'அரசியலில் கெளரவத் தோற்றம் போல விஜய் வருகிறார்' என்று கிண்டலாக பதில் அளித்தார்.

    • கல் குவாரிகளில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் 3 நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர்
    • கணக்கீடு பணியில் குவாரிகளுக்குள் 1500 கியூபிக் மீட்டர் வெட்டப்பட்ட கற்கள் சேமிக்கப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி. சமூக ஆர்வலரும், அ.தி.மு.க. நிர்வாகியுமான இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாகவும், குறிப்பாக திருமயம் கல்குவாரியில் முறைகேடாக கல்வெட்டி எடுக்கப்படுவதாக தொடர்ந்து புகார் மனு அளித்து வந்தார்.

    இந்த நிலையில் ஜகபர் அலி கடந்த 17-ந் தேதி திருமயம் அருகே உள்ள காட்டுபாவா பள்ளிவாசல் பகுதியில் தொழுகை முடித்து வீடு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, லாரி ஏற்றிக் கொல்லப்பட்டார்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக திருமயம் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்வாரி உரிமையாளர்களான ராசு, ராமையா உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் ராமைய தவிர மற்ற 4 பே ர்கைது செய்யப்பட்டார்கள். அவர்களை திருமயம் நீதிமன்றத்தில் ஆச்சர்யப்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களுக்கு வரும் 3-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    ராமையாவை போலீசார் தேடி வந்த நிலையில் நமணசமுத்திரம் போலீஸ் நிலையத்தில் அவர் சரண் அடைந்தார். இதனிடையே சமூக ஆர்வலர் ஜகபர் அலி குற்றம் சாட்டிய திருமயம் துளையானூர், மலைக்குடிபட்டி பகுதிகளில் உள்ள கல் குவாரிகளில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் 3 நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர்

    அனைத்து கல் குவாரிகளும் உரிய அனுமதியோடு இயங்குகின்றதா, அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டும் கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறதா என்பது குறித்தும், நேரடியாகவும், ட்ரோன் மூலமாகவும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வு மற்றும் அளவிடும் பணி முடிவடைந்ததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட கல் குவாரிகளில் எவ்வளவு தூரம் சட்ட விரோதமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது என்ற அளவீட்டை கனிம வளத்துறை இணை இயக்குனருக்கு அறிக்கையாக சமர்ப்பித்து உள்ளனர்.

    அதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆய்வு மேற்கொண்ட ராசு மற்றும் ராமையாவுக்கு சொந்த மான குவாரிகளின் ஒப்பந்த காலம் 2023-ம் ஆண்டுடன் முடிவடைந்த நிலையில் அந்தக் குவாரிகளில் சட்ட விரோதமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.

    ஒவ்வொரு பக்கமும் ஒரு மீட்டர் நீளமுள்ள கன சதுரத்தின் அளவு ஒரு கியூபிக் மீட்டர் ஆகும். அந்த வகையில் 6 ஆயிரம் கியூபிக் மீட்டர் கற்கள் கூடுதலாக வெட்ட்டி எடுக்கப்பட்டு உள்ளது அதிகாரிகள் சோதனையில் தெரிய வந்துள்ளது.

    மேலும் கணக்கீடு பணியில் குவாரிகளுக்குள் 1500 கியூபிக் மீட்டர் வெட்டப்பட்ட கற்கள் சேமிக்கப்பட்டு உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த அறிக்கையின் மேல் கனிமவளத்துறை இயக்குனர் ஆய்வு செய்து, அதன் பின்னர் என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டருக்கு அறிவுறுத்துவார். அதன் பின்னர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஏற்கனவே புதுக்கோட்டை கனிம வளத்துறை அதிகாரிகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே ராமையாவுக்கு ரூ.6 கோடியே 70 லட்சம் ரூபாய் அபராதமும், ராசுக்கு ரூ.12 கோடி ரூபாய் அபராதமும் விதித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வேங்கைவயல் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • கிராமத்திற்குள் வெளிநபர்கள் யாரும் செல்லாத வகையில் ஆங்காங்கே சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

    கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி 16-ந்தேதி முதல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் கடந்த 20-ந்தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோர் இந்த குற்றசெயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது.

    முட்டுக்காடு ஊராட்சித் தலைவர் பத்மாவின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாகக் குற்றப்பத்திரிகையில் தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதில் முரளிராஜா வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்துள்ளார்.

    இவருக்கு குரல் மாதிரி பரிசோதனை, டி.என்.ஏ. பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய 2 இளைஞர்கள் அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இந்த 3 பேரிடமும் ஆரம்பத்தில் இருந்தே சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    அறிவியல் பூர்வமான சாட்சிகள் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இவர்களை சம்பந்தப்பட்ட நபர்களாகக் கருதியுள்ளனர். இதனிடையே பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களையே குற்றவாளிகள் என கூறியுள்ளதை பல்வேறு தரப்பினர் எதிர்த்துள்ளனர்.

    வேங்கைவயல் பகுதி மக்கள் உண்மை குற்றவாளிகளை கண்டறியவும், சி.பி.ஐ. விசாரிக்க கோரியும் வேங்கைவயலில் நேற்று முன்தினம் முதல் அப்பகுதி மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று 3-வது நாளாக போராட்டம் தொடர்கிறது. வாயில் கருப்பு துணி கட்டி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த போராட்டத்தையொட்டி வேங்கைவயல் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அந்த கிராமத்திற்குள் வெளிநபர்கள் யாரும் செல்லாத வகையில் ஆங்காங்கே சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில், வேங்கைவயல் வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை ஏற்கக்கூடாது என புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    குற்றம் சாட்டப்பட்டுள்ள முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகிய 3 பேர் சார்பில் வி.சி.க. வக்கீல் மலர்மன்னன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

    அதில், புகார்தாரரை இதுவரை விசாரிக்காமல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை நகல் வேண்டும். குற்றப்பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. பாதிக்கப்பட்ட நபர்களையே குற்றம் சாட்டி உள்ளனர். எனவே சி.பி.சி.ஐ.டி. தாக்கல் செய்த குறப்பத்திரிகையை ஏற்க கூடாது.

    சி.பி.ஐ. விசாரணை வேண்டும். 3 பேரின் பெயர்களையும் குற்றப்பத்திரிகையில் இருந்து நீக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் இருந்து மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு இன்றே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    • புகாருக்குள்ளான 2 கல் குவாரிகளில் விசாரணை நடத்தினர்.
    • திருமயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி (வயது 58) அதிமுக பிரமுகரும் சமூக ஆர்வலருமான இவர் திருமயம் துளையானூர் பகுதியில் இயங்கும் கல் குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகளை அம்பலப்படுத்தினார்.

    மேலும் சட்டவிரோதமாக கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் அளித்ததோடு நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி ஜகபர் அலி மசூதிக்கு சென்று திரும்பிய போது மினி லாரி ஏற்றி படுகொலை செய்யப் பட்டார் இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கொலையை கண்டித்து அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    இதுதொடர்பாக திருமயம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராசு ,ராமையா ஆகிய 2 கல் குவாரி அதிபர்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர் பின்னர் அரசியல் அழுத்தம் காரணமாக வழக்கு சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கி உள்ளது.

    நேற்று இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஜகபர் அலியின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஜகபர் அலிக்கு மிரட்டல் விடுத்து வந்தவர்கள் தொடர்பாக அவரது 2-வது மனைவியிடம் விசாரித்தனர். அதன் மூலம் கொலையின் பின்னணியில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா? என விசாரித்தனர்.

    அதன் பின்னர் இன்று கொலை நடந்த இடம் மற்றும் புகாருக்குள்ளான 2 கல் குவாரிகளில் விசாரணை நடத்தினர். இதற்கிடையே ஜகபர் அலி கொலை சம்பவத்தில் கவனக்குறைவாக இருந்ததாக திருமயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண்குமார் பிறப்பித்து உள்ளார்.

    ×