என் மலர்
உள்ளூர் செய்திகள்
தருமபுரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை
- மரங்கள் முறிந்து சுண்ணாம்பு காரை மூலம் போடப்பட்ட தார்சு கூரை இடிந்து விழுந்தது.
- இந்த மழையால் கோடை வெப்பத்தின் தாக்கம் குறைந்து மாலை நேரத்தில் ஊட்டி போல் காட்சியளித்து வருகிறது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
நேற்றும் மாலை பாலக்கோடு, அரூர் தருமபுரி, நல்லம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் நல்ல மழை பெய்துள்ளது. இந்த சாலையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
பாப்பாரப்பட்டியில் நேற்று இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. விடிய விடிய செய்த கனமழையால் பாப்பாரப்பட்டி மெயின் ரோட்டில் துவக்கப் பள்ளிக்கு அருகில் நூற்றாண்டு பழமை வாய்ந்த கட்டிடத்தின் முன்பகுதி இடிந்து மெயின் ரோட்டில் விழுந்தது.
அதிகாலை நேரம் என்பதால் மக்கள் நடமாட்டம் எதுவும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பழுதடைந்த நிலையில் இருந்த கட்டிடத்தின் தார்சு கூரையின் அடிப்பகுதியில் இருந்த மரங்கள் முறிந்து சுண்ணாம்பு காரை மூலம் போடப்பட்ட தார்சு கூரை இடிந்து விழுந்தது.
இந்த மழையால் கோடை வெப்பத்தின் தாக்கம் குறைந்து மாலை நேரத்தில் ஊட்டி போல் காட்சியளித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து விடுபட்டு சந்தோசம் அடைவதுடன் இந்த மழையால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது.