என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![திரவுபதி அம்மன் கோவில் குளத்தை சூழ்ந்துள்ள பாசிகள் திரவுபதி அம்மன் கோவில் குளத்தை சூழ்ந்துள்ள பாசிகள்](https://media.maalaimalar.com/h-upload/2022/10/13/1776278-1327921-3nemili.jpg)
X
திரவுபதி அம்மன் கோவில் குளத்தை சூழ்ந்துள்ள பாசிகள்
By
மாலை மலர்13 Oct 2022 3:51 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கால்நடைகள் தண்ணீரில் சிக்கிக் கொள்வதாக குற்றச்சாட்டு
- சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ திரவுபதி அம்மன் கோவில் குளத்தில் தண்ணீர் நிரம்பி காணப்பட்டாலும் குளம் முழுவதும் பாசிகளால் சூழப்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
எனவே குளத்தை சீரமைத்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் அந்த குளத்தில் கால்நடைகள் தண்ணீர் அருந்த சென்றாலும் தண்ணீரில் சிக்கிக் கொள்கின்றன.
எனவே பழமை வாய்ந்த கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும் விபத்துக்கள் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
X