என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கலைஞர் நூற்றாண்டு விழா கிரிக்கெட் போட்டி கலைஞர் நூற்றாண்டு விழா கிரிக்கெட் போட்டி](https://media.maalaimalar.com/h-upload/2023/07/24/1920881-img-20230723-wa02791.webp)
X
கலைஞர் நூற்றாண்டு விழா கிரிக்கெட் போட்டி
By
மாலை மலர்24 July 2023 3:28 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- காவேரிப்பாக்கம் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்தது
- எம்.எல்.ஏ ஈஸ்வரப்பன் தொடங்கி வைத்தார்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பேரூர் திமுக சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு காவேரிப்பாக்கம் வார்டு கவுன்சிலரும் பேரூர் செயலாளருமான பாஸ் என்கிற நரசிம்மன் தலைமை வகித்தார். பேரூர் துணை செயலாளர்கள் தயாளன், தட்சணாமூர்த்தி, ஒன்றிய பிரதிநிதி பழனிச்சாமி, பொருளாளர் தியாகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பளாராக ஆற்காடு எம்.எல்.ஏ ஈஸ்வரப்பன் கலந்துகொண்டு கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் சுந்தரமூர்த்தி, மாவட்டத் துணைச் செயலாளர் துரைமஸ்தான், பேரூர் மாணவரணி தலைவர் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
X